April 2026

News, World News

டைட்டானிக் விபத்தின் 114-வது நினைவு தினம் இன்று – ஆழ்கடலில் உறங்கும் மறக்க முடியாத வரலாறு

வரலாற்றில் ஆழமான சோகத்தை ஏற்படுத்திய R.M.S டைட்டானிக் கப்பல் விபத்தின் 114-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1912 ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக், அடுத்த நாள் ஏப்ரல் 15 அதிகாலையில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்தனர். “மூழ்கவே முடியாத கப்பல்” என அழைக்கப்பட்ட டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளானது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி, […]

Local News, News

கற்பிட்டியில் கடத்தல் முயற்சி முறியடிப்பு – சந்தேக நபர் கைது

கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் முந்திரியம்பருப்பு பெருந்தொகையுடன் பாரவூர்தி ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவரை கற்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாச்சிகல்லி பகுதியில் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கற்பிட்டி காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், பாரவூர்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 742 கிலோகிராம் மஞ்சளும், 800 கிலோகிராம் முந்திரியம்பருப்பும் பறிமுதல் செய்யப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த

News, Uncategorized

கடும் வெப்ப எச்சரிக்கை: நாளை வெளியில் செல்பவர்கள் கவனத்திற்கு!

இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 21 மாவட்டங்களில் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘அவதான மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் நிலவும் சூழலில் நீண்ட நேரம் இருப்பதால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்,

News, World News

ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்தால் உலகம் பேரழிவைச் சந்திக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்பட்டால் உலகம் கடுமையான பேரழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ‘Fox Business’ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஈரானுடன் தொடர்புடைய மோதல் நிலை முடிவுக்கு வந்ததும், சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகளும் மின்சாரக் கட்டணங்களும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் எனவும் அவர் கூறினார். தற்போதைய பதற்றமான சூழ்நிலை தணிந்த பின், அமெரிக்காவையும் உலக பொருளாதாரத்தையும் சாதகமாக பாதிக்கும் மாற்றங்கள்

News, World News

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரம்: சீன எண்ணெய் கப்பல்களைத் தடுக்க அமெரிக்கா திட்டம்

ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி வல்லரசுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானிய எண்ணெயை ஏற்றிச் செல்லும் சீன எண்ணெய் கப்பல்களை வழிமறித்து தடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கத் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் கருத்து தெரிவிக்கையில், ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் சீன டாங்கர் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் எனத் தெரிவித்துள்ளார். “சீனாவால் ஈரானிய எண்ணெயைப் பெற முடியாது. அவர்கள் எண்ணெயைப்

Local News, News

வெளிநாடொன்றில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி கடுமையான தாக்குதல்

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மற்றும் ஒரு விமானி இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்துக்கான நிறுவன பொறுப்பதிகாரியான அமிதாப் அந்தனிபிள்ளை மற்றும் UL403 விமானத்தின் விமானி ஆகியோருக்கிடையே இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விமானத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் போது ஏற்பட்ட வாய்த்தகராறு கடுமையான மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதன்போது விமானி

News, World News

சர்வதேச சந்தையில் தங்க விலை உயர்வு

சர்வதேச சந்தையில், இன்றையதினம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,766.53 டொலர்களாக விற்பனையாகின்றது. அதேநேரம், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 76.25 டொலர்களாக விற்பனையாகின்றது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஆரம்பித்துள்ளன. இதனால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளமை இந்த விலை மாற்றத்திற்கு காரணமாக

News, World News

அமெரிக்கா–ஈரான் பதற்றம் உச்சத்தில்: இராணுவ முற்றுகை, உலக அரசியலில் அதிர்ச்சி அலை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானைச் சுற்றியுள்ள இராணுவ முற்றுகை அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச அரசியலில் பதற்றம் உச்சநிலையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை மற்றும் ட்ரம்ப்பின் நிலைப்பாடுஅமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்டு இராணுவ முற்றுகை செயல்பாட்டில் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஈரான் சமரச பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் திறந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் எதிர்வினை மற்றும் மக்கள் போராட்டம்அமெரிக்காவின்

Local News, News

ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிறந்துள்ள இந்தச் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய

Scroll to Top