பஞ்சாப் முதலிடம் தக்கவைக்குமா? இன்று ஐபிஎலில் இரட்டை மோதல்கள்

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 35 மற்றும் 36ஆவது போட்டிகள் இன்று (25) நடைபெறுகின்றன.

இன்றைய முதல் போட்டி பிற்பகல் 3.30க்கு டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது. இரவு 7.30க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டிகள் புள்ளிப்பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top