
ஜூன் மாத எரிவாயு விலை குறித்து இன்று முடிவு
ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்திர விலைச் சூத்திரத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஜூன் மாதத்திற்கான புதிய எரிவாயு விலை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் லாஃப்ஸ் நிறுவனம் தனது சமையல் எரிவாயு விலையை உயர்த்தியிருந்த போதிலும், லிட்ரோ நிறுவனம் எந்தவித விலைத் திருத்தத்தையும் மேற்கொள்ளாமல் விலைகளை நிலையான நிலையில் பேணியிருந்தது […]









