
அடுத்த சில நாட்களும் மழையுடன் கூடிய வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த […]









