
நாட்டின் பல பகுதிகளில் இன்று (08) பலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் நாட்டின் 21 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ (Red Alert) எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ (Amber Alert) எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், அதனுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுவதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
