
வரலாற்றில் ஆழமான சோகத்தை ஏற்படுத்திய R.M.S டைட்டானிக் கப்பல் விபத்தின் 114-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
1912 ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக், அடுத்த நாள் ஏப்ரல் 15 அதிகாலையில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்தனர். “மூழ்கவே முடியாத கப்பல்” என அழைக்கப்பட்ட டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளானது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி, கடலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.
இன்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் சுமார் 12,500 அடி ஆழத்தில் டைட்டானிக் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பது, மனித வரலாற்றின் மிகப்பெரிய கடல் விபத்துகளின் நினைவாக தொடர்கிறது.
