
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி வல்லரசுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானிய எண்ணெயை ஏற்றிச் செல்லும் சீன எண்ணெய் கப்பல்களை வழிமறித்து தடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கத் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் கருத்து தெரிவிக்கையில், ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் சீன டாங்கர் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
“சீனாவால் ஈரானிய எண்ணெயைப் பெற முடியாது. அவர்கள் எண்ணெயைப் பெறலாம், ஆனால் அது ஈரானிய எண்ணெயாக இருக்கக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு முன்பு, ஹோர்முஸ் நீரிணை தங்களுக்கு திறந்ததாகவே உள்ளது என்று சீனா தெரிவித்திருந்தது. மேலும், ஈரானுடன் உள்ள வர்த்தக உறவுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த நீரிணையைப் பயன்படுத்தும் உரிமை தமக்கு இருப்பதாகவும், மற்ற நாடுகள் தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
