
இன்றைய வானிலை: பல பகுதிகளில் மழை; கடற்பரப்பில் பலத்த காற்று எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் காணப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் […]









