
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் உயர்வை அறிவித்துள்ளது.
புதிய விலைகளின்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டு ரூ. 410.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றருக்கு ரூ. 15 உயர்த்தப்பட்டு ரூ. 470.00 ஆக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டோ டீசல் லீற்றருக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 392.00 ஆகவும், சுப்பர் டீசல் லீற்றருக்கு ரூ. 15 உயர்த்தப்பட்டு ரூ. 458.00 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மண்ணெண்ணெய் லீற்றரின் விலை ரூ. 10 அதிகரிக்கப்பட்டு ரூ. 265.00 ஆக மாற்றப்பட்டுள்ளது.
