
தயாளினி திலீபன் கொலை வழக்கில் புதிய தகவல் – நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளரான தயாளினி திலீபன் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர் தனது வீட்டிலேயே கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக நீதிவான் எஸ். லெனின்குமார் தெரிவித்தார். வழக்கின் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் […]









