May 2026

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம் விலை வீழ்ச்சி

வெள்ளி விலையும் குறைவு பதிவு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,509.64 அமெரிக்க டொலர்களாக நிலவுகிறது. இது முன்னைய நிலையை விட 31.55 டொலர்கள் (0.69%) குறைவாகும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.51 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 0.84 டொலர்கள் (1.10%) வீழ்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

News, Sports News

57 பந்துகளில் 87 ரன்கள் – இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்டர்பரியில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் பின்னர் அதிரடியாக களமிறங்கிய Sophie Devine போட்டியின் போக்கையே மாற்றினார். அவர் 57 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 87 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான நிலையை உருவாக்கினார். அவருடன் இணைந்து Maddy

News, Sports News

இந்தியாவின் அதிவேக மனிதர் பட்டம் வென்ற குரிந்தர்வீர் சிங்

100 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனை பதிவு இந்தியாவின் தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பஞ்சாபைச் சேர்ந்த Gurindervir Singh புதிய சாதனை ஒன்றை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற 100 மீட்டர் அரையிறுதி போட்டியில், அவர் 10.09 வினாடிகளில் இலக்கை கடந்தார். இதன் மூலம் தனது முந்தைய சாதனையான 10.17 வினாடிகளை அவர் முறியடித்ததுடன், மற்ற போட்டியாளர்களின் முன்னைய சாதனைகளையும் தகர்த்தார். பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் அதிவேகமாக ஓடி இலக்கை

Cinema, News

கிரிக்கெட்டில் அசத்திய அஜித் குமார் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகர் Ajith Kumar தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 90களில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் அஜித் குமார், நடிப்பு மட்டுமன்றி கார் ரேஸிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தனது நண்பர்களுடன் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் ஈடுபட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில், அவர் அதிரடியான ஷாட்டுகள் அடிப்பதுடன்,

News, World News

பாகிஸ்தானில் பயங்கர தாக்குதல்

Pakistan நாட்டின் தென்மேற்கு பகுதியான Quetta நகரில் பயணிகள் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த வெடிப்பு காரணமாக ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்ததுடன், சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை

News, World News

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதுடன், இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. சந்தை தகவல்களின் அடிப்படையில், WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 96.60 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.05 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதற்கிடையில்,

Local News, News

பொதுமக்களுக்கு காவல்துறையின் அவசர எச்சரிக்கை

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக நடைபெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அண்மைக் காலமாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும்

Local News, News

மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் டில்வின் சில்வா விளக்கம்

நடப்பாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு திட்டமில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் Tilvin Silva தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி, நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை சமாளிக்க அனர்த்த நிவாரண பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக சுமார் 500 பில்லியன் ரூபாய் ஒதுக்க வேண்டிய நிலை

News, Uncategorized

பல மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அவசர அறிவுரை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொகுபிட்டிய பகுதிகள் விழிப்புணர்வு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

News, World News

இலங்கையில் உயிர்மாய்ப்பு விகிதம் 70% குறைவு: ஜெனிவாவில் அமைச்சர் தகவல்

அதிவீரியம் கொண்ட நச்சுப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகத் தடை செய்ததன் மூலம், இலங்கையில் இடம்பெறும் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் சுமார் 70 சதவீதத்தால் குறைந்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் 79 ஆவது உலக சுகாதார பேரவையின் பக்கநிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் உயிர்மாய்ப்புகளை தடுத்தல்” என்ற விசேட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 1995 ஆம்

Scroll to Top