
வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்ற தொடருந்து ஓட்டுநர்கள் தீர்மானம் – தாமதங்கள் ஏற்படும் சாத்தியம்
தொடருந்து ஓட்டுநர்கள் இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி தொடருந்துகளை இயக்கத் தீர்மானித்துள்ளதாக லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால் தொடருந்து சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாத்துவ பகுதியில் ‘சாகரிகா’ தொடருந்து தடம் புரண்ட சம்பவத்தையடுத்து, அதில் தொடர்புடைய நான்கு ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். “சாகரிகா தொடருந்து தடம் புரண்டதற்காக சாரதி உள்ளிட்ட […]









