March 2026

Health & Beauty Tips, News

இனி சொறியத் தேவையில்லை! விடாப்படியான பொடுகை வேரோடு அழிக்க இதோ இயற்கை வழிகள்!

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையை சுத்தமாக பராமரிக்காமல் போவது போன்றவை தலையில் பொடுகு பிரச்னை உருவாக முக்கிய காரணங்கள் ஆகும். மேலும், தலையின் சருமம் அதிகமாக உலர்ந்துபோதல், இறுகிக் காணப்படும் வெள்ளை துகள்கள், அடிக்கடி தலைமுடியை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, ஃபங்கல் தொற்று அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படுதல், தலைக்குப் பயன்படுத்தும் தவறான ஷாம்பு, எண்ணெய், சாயம், ஹேர் ஸ்ப்ரே […]

Health & Beauty Tips, News

அடர்த்தியான, அழகான புருவம் வேண்டுமா? உங்கள் சமையலறையிலேயே எளிய தீர்வுகள்!

அடர்த்தியான மற்றும் அழகான புருவம் என்பது பல பெண்களின் கனவு. இயற்கையாகவே புருவம் செழுமையாக வளர சில எளிய வீட்டுச் செய்முறைகள் உதவும். இயற்கை முறைகள்: இயற்கையாகவே அடர்த்தியான புருவம் வளர்வதற்கு தேங்காய் எண்ணையையும், விளக்கெண்ணையையும் தினமும் இரவு தூக்க போகும் முன்பு தடவி விட்டு தூங்க வேண்டும். சின்ன வெங்காயத்தில் இருந்து எடுத்த சாரை புருவத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவி விடவும். வெங்காயத்தில் சல்பர் இருப்பதால் அது முடி வளர்ச்சிக்கு உதவும். கற்றாழை ஜெல்லை புருவத்தில் தடவி

News, World News

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் புதிய இராணுவ திட்டம் – 10,000 படையினர் அனுப்பல் பரிசீலனை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை முன்னிட்டு, அங்கு கூடுதலாக 10,000 தரைப்படை வீரர்களை அனுப்புவது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகன்) ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த தகவலை The Wall Street Journal வெளியிட்டுள்ளதுடன், இந்நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpக்கு மேலதிக இராணுவ விருப்பங்களை வழங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தெஹ்ரானுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் கூட, அமெரிக்கா ஒரே நேரத்தில்

News, World News

மசகு எண்ணெய் விலை ஏற்றம் தொடர்கிறது – சர்வதேச சந்தையில் உயர்வு

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் தாக்கம் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதன்படி, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 107.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 94.2 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது. இந்த உயர்வு, உலகளாவிய எரிசக்தி சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்கால விலை நிலவரம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

Cinema, News

கருப்பு மாடர்ன் லுக்கில் ஜோதிகா கலக்கல் போட்டோஷூட் – ரசிகர்கள் மெய்மறந்து பாராட்டு

தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஜோதிகா, தனது திறமையாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர். ஹிந்தி திரைப்படங்களின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த அவர், நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக சில ஆண்டுகள் இடைவெளி எடுத்த ஜோதிகா, தற்போது மீண்டும் சினிமாவில்

News, World News

‘15 அம்ச’ அமெரிக்க திட்டம் மீது ஈரான் கவனம் – அதிகாரப்பூர்வ பதில் இன்னும் இல்லை

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன்மொழிந்ததாகக் கூறப்படும் ‘15 அம்ச சமாதானத் திட்டம்’ குறித்து ஈரான் கவனமாக பரிசீலித்து வருவதாக அதன் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை ஈரான் உடனடியாக நிராகரிக்கவில்லை என்றாலும், அதற்கான உத்தியோகபூர்வ நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில ‘15 அம்சத் திட்டம்’

Local News, News

கோழி இறைச்சி – முட்டை விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வால், ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும் தோலுடன் கூடிய ஒரு கிலோ உறைந்த கோழிக்கறியின் விலை 100 ரூபாயிலும் உயர்ந்துள்ளது. சிறிய முட்டையின் விலை 37 ரூபாயாகவும், நடுத்தர முட்டையின் விலை 39 ரூபாயாகவும் பெரிய (சிவப்பு) முட்டையின் விலை 41 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதன்படி எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயு விலை உயர்வு ஆகியவை கோழி வளர்ப்பு நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்

Local News, News

போர்ச் சூழல் தாக்கம்: தங்க விலை திடீர் ஏற்றம்!

சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான போர்ச் சூழ்நிலையின் தாக்கத்தால், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில காலமாக வீழ்ச்சியடைந்திருந்த தங்க விலை, தற்போது மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,413.02 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளி 70.23 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. இந்த சர்வதேச விலை உயர்வின் தாக்கமாக,

Local News, News

ஹோர்முஸ் பதற்றம் தாக்கம்: இலங்கையில் தங்கும் சொகுசு கார்கள்

மத்திய கிழக்கில், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் பதற்றம் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல சரக்குக் கப்பல்கள் தங்களது இலக்குகளை அடைய முடியாமல் மாற்று துறைமுகங்களுக்கு திசை திருப்பப்படுகின்றன. இதன் பகுதியாக, மத்திய கிழக்கு வாடிக்கையாளர்களுக்காக அனுப்பப்பட்ட லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி உள்ளிட்ட சுமார் 50 சொகுசு பயன்படுத்தப்பட்ட கார்கள் துபாயை அடைய முடியாமல் இலங்கை மற்றும் சீன துறைமுகங்களில் தற்காலிகமாக இறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள்

News, World News

இலங்கைக்கு உதவ முன்வந்தது ஈரான்! எரிபொருள் வழங்க தயாரென அறிவிப்பு

இலங்கை ஒரு நட்பு நாடாக இருப்பதால், எந்த நேரத்திலும் உதவி செய்ய ஈரான் தயாராக உள்ளது என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியபோது, இலங்கை எரிபொருள் அல்லது பிற அத்தியாவசிய பொருட்களை கோரினால் அவற்றை வழங்குவதற்கு ஈரான் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தனது நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணையை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

Scroll to Top