March 2026

Local News, News

இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரங்கள்

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கவிலை 4,513.15 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.48 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அந்தவகையில் இலங்கையில் இன்று காலை தங்கவிலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும் விற்பனை […]

Cinema, News

தனது ஓட்டுநர் மகனுக்கு எம்எல்ஏ சீட் – மேடையிலே கண்ணீரை துடைத்த விஜய்

விருகம்பாக்கத்தில் ஓட்டுநர் மகனை வேட்பாளராக அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.  தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை விருகம்பாக்கத்தில் சபரிநாதன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்.  சபரிநாதனை வேட்பாளராக அறிவித்த உடன், விஜயை கட்டி அனைத்து கண்கலங்கினார். அப்போது அருகே சபரிநாதனின் தந்தை

Local News, News

நாட்டில் வெப்பம் நீடிப்பு: சில பகுதிகளில் மாலை மழைக்கு வாய்ப்பு

நாட்டில் நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை பகுதிகளிலும் காலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படலாம்.

Uncategorized

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு: அமெரிக்க தளங்களை குறிவைத்த ஈரான்

அமெரிக்காவுடன் தொடர்புடைய மத்திய கிழக்கு பிராந்திய இராணுவ தளங்கள் மற்றும் முக்கிய ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் மேற்கொள்ளப்பட்டதாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது. IRGC வெளியிட்ட அறிக்கையில், “உண்மையான வாக்குறுதி 4” (Operation True Promise 4) நடவடிக்கையின் 86வது அலைக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்த பல கட்ட தாக்குதலாகும்; இதில்

Cinema, News

8 நாட்களில் 1000 கோடியை கடந்த ‘துரந்தர் 2’!

கடந்த ஆண்டு இந்திய திரையுலகின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக துரந்தர் அமைந்தது. துரந்தர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டதட்ட மூன்று மாதங்களில் துரந்தர் 2 வெளிவந்துள்ளது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன் என பலரும் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான துரந்தர் 2 மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 8

Local News, News

புத்தாண்டு பாதுகாப்பு அதிரடி: ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் விசேட திட்டம் அமுல்!

சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். கொழும்பு உட்பட பிரதான நகரங்களின்

Cinema, News

அரசியல் களத்தில் நடிகர் சுந்தர் சி – மதுரை மத்திய தொகுதியில் போட்டி

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர் சி வேட்பாளராக போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு மூலம் சுந்தர் சி அரசியல் களத்தில் நேரடியாக நுழைகிறார் என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை பாரதிய

Uncategorized

பிரிக்ஸ் மாநாட்டை தவிர்த்ததே தவறா? எரிபொருள் நெருக்கடி குறித்து நாமல் விமர்சனம்

ஜனாதிபதி அவர்கள் பிரிக்ஸ் மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டிருந்தால், எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ரஷ்யாவிடமிருந்து மேலும் விரைவானதும் சிறந்ததுமான ஒத்துழைப்பைப் பெற முடிந்திருக்குமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (28) பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை கூறினார். பிரிக்ஸ் மாநாட்டிற்கு அழைப்பு கிடைத்திருந்தபோதிலும், ஜனாதிபதி அதில் பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால், ரஷ்ய எரிசக்தி துணை அமைச்சரின் வருகைக்காக காத்திருக்காமல், அங்கு

Local News, News

பேருந்துகளில் கட்டண விவரங்களை காட்சிப்படுத்தல் கட்டாயம் – மீறினால் கடும் நடவடிக்கை

பேருந்துகளில் திருத்தப்பட்ட கட்டண விவரங்களை பொதுமக்கள் தெளிவாகக் காண்பிக்கும் வகையில் காட்சிப்படுத்துவது இனி கட்டாயமாகும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. அனுமதிப்பத்திர நிபந்தனைகளின் கீழ் இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து பேருந்து இயக்குநர்களும் இதை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது. மேலும், கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்தாத பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் அனுமதிப்பத்திரம் ரத்து செய்தல் அல்லது அபராதம் விதித்தல்

Health & Beauty Tips, News

உதடு கருமை மறைய எளிய ரகசியம் – வீட்டிலேயே செய்யலாம்!

மோசமான பழக்கங்களால் சிலருக்கு உதடு கருமையாக தோற்றமளிக்கும். கருமையான உதடுகள் மரபியல், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் சில மருத்துவ செயல்முறை உட்பட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். இப்படி எந்த காரணமாக இருந்தாலும் சில செயல்முறை மூலம் உங்கள் உதட்டை சிவப்பாக மாற்றிவிடலாம் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் முகத்தில் உள்ள கவர்ச்சியான பாகங்களில் ஒன்று உதடு. எனவே தான் உதடு ரோஸ் நிறத்தில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனாலும் சில காரணங்களால் நமது

Scroll to Top