March 2026

Cinema, News

பல நாள் காத்திருப்பிற்கு பின் வெளியான அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது R. J. Balaji இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் (Dream Warrior Pictures) தயாரிப்பில், சாய் அபயங்கலர் இசையில் உருவாகும் இந்த படம் சூர்யாவின் 45-ஆவது திரைப்படமாகும். இப்படத்திற்கு ‘கருப்பு’ (Karuppu) என பெயரிடப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்ட தகவலின்படி, ‘கருப்பு’ திரைப்படம் 2026 மே 14ஆம் தேதி உலகம் […]

News, Sports News

ஈரானுக்கு ஆதரவு: ஜப்பான் முன்னாள் நட்சத்திரம் ஹோண்டாவின் விளம்பர ஒப்பந்தம் இடைநிறுத்தம்

ஜப்பானின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் கெய்சுகே ஹோண்டா, ஈரான் உலகக் கிண்ணத்தில் பங்கேற்க வேண்டும் என ஆதரவு தெரிவித்ததையடுத்து, அமெரிக்க நிறுவனத்துடன் இருந்த தனது விளம்பர ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்த உள்ள அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் ஈரான் அணியும் பங்கேற்க வேண்டும் என்று ஹோண்டா தனது ‘X’ சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். “இது உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய விஷயம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும், தனிப்பட்ட முறையில்

News, Sports News

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையில் முறைகேடுகள்: ஐசிசியுடன் கலந்தாலோசிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் முடிவு!

பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து விரிவான விசாரணைகள் தொடங்கப்படவுள்ளதாக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் அமினுல் ஹக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிசிபி தேர்தல்களில் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் செயல்முறைகளில் தலையீடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு மார்ச் 11 அன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவை அமைத்தது அரசின் நேரடி தலையீடு என பிசிபி குற்றம்சாட்டியிருந்தாலும், முன்னாள் அரசாங்கமே கிரிக்கெட் சபை தேர்தல்களில்

Local News, News

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் புதிய வாய்ப்புகள் – கல்வி, வேலைவாய்ப்பில் பெரிய முன்னேற்றம்

இலங்கையர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அவுஸ்திரேலியாவில் மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் கலந்து கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கல்வி மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பல துறைகளில் வலுவாக இருப்பதை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார். கல்வி, விவசாயம் மற்றும் நிலையான அபிவிருத்தி துறைகளில் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க அவுஸ்திரேலியா தயாராக

Local News, News

திரிபோஷா உற்பத்தி மீண்டும் தொடக்கம்: இடையறாத விநியோகத்திற்காக 24 மணி நேர உற்பத்தி

மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது. திரிபோஷா தயாரிப்பிற்கு தேவையான தரமான மக்காச்சோளம் கிடைக்காததால் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நாடு முழுவதும் விநியோகம் சீர்குலைந்திருந்தது. இதனை சரிசெய்யும் நோக்கில், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலையீட்டின் கீழ், அமைச்சரவை அனுமதியுடன் மக்காச்சோளம் இறக்குமதி செய்ய அரச வர்த்தகப் பல்வகை கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Local News, News

பாடசாலை விடுமுறை தொடர்பான புதிய அறிவிப்பு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வை குறைக்கும் நோக்கில் பாடசாலைகளை மூடுவதற்கோ அல்லது முழுமையாக கட்டுப்படுத்துவதற்கோ அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இதை குறிப்பிட்டார். திட்டமிட்டபடி முதலாம் பாடசாலை தவணை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும், அதுவரை புதன்கிழமைகளில் மட்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

News, World News

எண்ணெய் விலை உயரும் அபாயம்: ஈரான் கடும் எச்சரிக்கை

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு பதிலடியாக எரிசக்தி மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகளை குறிவைத்து உடனடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப், “ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கியமான எரிசக்தி மற்றும் எண்ணெய் அமைப்புகள் சட்டபூர்வமான இலக்குகளாக கருதப்படும். அவை கடுமையாக தாக்கப்பட்டு மீள முடியாத சேதம் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும்,

Local News, News

நுவரெலியாவில் மரக்கறி விலை அதிரடி உயர்வு

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மரக்கறி விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் பதிவாகியுள்ளது. குறிப்பாக Broccoli மற்றும் Cauliflower வகைகளுக்கு அதிக கேள்வி நிலவி வருகிறது. அதன்படி, Cauliflower ஒரு கிலோ 950 ரூபாய்க்கும், Broccoli ஒரு கிலோ 750 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. மேலும், மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாய் வகைகள் கிலோவுக்கு 700 ரூபாய்க்கும், பச்சை குடைமிளகாய் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கறிமிளகாய் ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 750

News, Sports News

“மும்பைக்காக மீண்டும் சாம்பியன் பட்டம்” – ரோகித் சர்மா உறுதி

ஐபிஎல் 2026 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது ரசிகர்களுக்காக “MI Mix” என்ற பிரம்மாண்ட கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியது. இந்த விழா மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கார்டனில் மார்ச் 21 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

Local News, News

அரசாங்கம் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சியினரை குறிவைக்கிறது – நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக எதிர்க்கட்சியினர்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, உலக சந்தை விலையை விட ஒரு பீப்பாய் எரிபொருளுக்கு சுமார் 45 அமெரிக்க டொலர் அதிகமாக செலுத்தி கொள்வனவு செய்யப்படுகின்றது. நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலையில் எரிபொருள் பெற்றுத்தருவோம் என அரசாங்கம் முன்பு உறுதியளித்த

Scroll to Top