Local News

Local News, News

தங்க விலை நிலைமை மாற்றமின்றி தொடர்கிறது

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Local News, News

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இலங்கை வருகை: மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சற்று முன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறுகிறது. இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Local News, News

எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: முச்சக்கர கட்டண உயர்வுக்கு கோரிக்கை

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்ததாவது, பெற்றோல் விலை ரூ. 12 உயர்ந்துள்ள நிலையில் தற்போதைய கட்டண அமைப்பு தொடர முடியாது என்பதால் மாற்றம் அவசியம் என கூறினார். தற்போது மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை முச்சக்கர கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது.

Local News, News

வரி மற்றும் டொலர் உயர்வு தாக்கம்: வாகன விலை மேலும் உயரும் அபாயம்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டமை மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த மாற்றம் அனைத்து வகையான வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபல வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் எனவும்

Local News, News

தேசிய சிறுவர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்: நவீன மாற்றங்களுக்கு அரசு நடவடிக்கை

தற்போதைய சமூக மாற்றங்கள் மற்றும் உருவாகி வரும் சவால்களுக்கு ஏற்ப சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தை மீளாய்வு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1998 ஆம் ஆண்டு இலக்கம் 50

Local News, News

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு வாய்ப்பு – 11% உயர்வு என தகவல்

கட்டணங்கள் குறைக்கப்படும் என அரசாங்கம் முன்பு அறிவித்திருந்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் சுமார் 11 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் காரணமாக சுமார் 18 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சுமையை

Local News, News

அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு: மருத்துவர்கள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ கூறுகையில், இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சி மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக வெளிநாட்டு மருந்து விநியோகஸ்தர்கள் வழக்கமான விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்தார். இந்த மருந்துத்

Local News, News

மே மாதத்தில் எரிபொருள் விலை மாற்றமில்லை: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

இன்றைய தினம் (01) எரிபொருள் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான எதிர்கால தீர்மானம் அடுத்த நாட்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 21 ஆம் திகதி எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருந்தன. அப்போது பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டன. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ரூ.81 அதிகரித்து ரூ.398 ஆகவும், ஒக்டேன் 95

Local News, News

பிற்பகலில் மழை அதிகரிப்பு: பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறப்பாக சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை நேரத்திலும் மழை பெய்யக்கூடும். இதேவேளை, மத்திய, சபரகமுவ, வட-மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்

Local News, News

பருத்தித்துறை மீனவர் சித்திரவதை விவகாரம்: “கொள்ளையர் அல்ல” – தமிழக ஊடகங்களுக்கு கண்டனம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர், தமிழக கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மீனவருக்கு நீதி வழங்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக கடற்றொழிலாளர்களின் இந்த செயல் கண்ணியமற்றதும் கண்டிக்கத்தக்கதுமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மீனவரை “கடற்கொள்ளையன்” என சில தமிழக ஊடகங்கள் சித்தரித்துள்ளமை

Scroll to Top