நாளை (20) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை மற்றும் பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களுடன் சேர்த்து காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் உள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
