
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்துள்ளார்.
இந்திய வான் படைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்ட தூதுக்குழுவும் நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
இவ்விழாவின் போது இருநாட்டு உறவுகள் மற்றும் பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய சந்திப்புகள் நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
