
அமெரிக்க டொலர் பெறுமதியில் கணிசமான சரிவு; புதிய மாற்று வீதம் வெளியீடு
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 326 ரூபாய் 34 சதமாக பதிவாகியுள்ளது. அதேவேளை, விற்பனை பெறுமதி 336 ரூபாய் 58 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 331 ரூபாய் 42 சதமாகவும், விற்பனை பெறுமதி 341 ரூபாய் 36 சதமாகவும் இருந்தது.
இதன்மூலம், டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன.
