
முடக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான சொத்துகளை விடுவிப்பதற்கான செயல்முறைகள், அந்நாட்டு மத்திய வங்கியுடன் இணைந்து நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், ஈரான் தனது சொத்துகளைத் தானாகவே பயன்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் முழுமையான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நீண்ட காலமாக தொடரும் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான பொறுப்பு அமெரிக்காவுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் நிதி சொத்துகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கோரிக்கையாக இருந்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
