
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (18) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,319 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது என வெளிநாட்டு சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளதுடன், ஒரு அவுன்ஸ் வெள்ளி 69.11 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை விலை வீழ்ச்சி காரணமாக உள்ளூரிலும் விலை குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட காரணிகள் இந்த விலை மாற்றங்களுக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
