Bar Association of Sri Lanka, மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றக் கட்டமைப்பில் பணியாற்றும் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டு, Anura Kumara Dissanayake அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், தற்போது பதவியில் உள்ள நீதியரசர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் முயற்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கையாக பொதுமக்களால் கருதப்படக்கூடும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நீண்டகாலத் திட்டமிடல் அல்லது விரிவான கொள்கை ஆய்வு இன்றி இத்தகைய மாற்றங்களை முன்னெடுப்பது, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் கௌரவத்திற்கும் நீதியரசர்களின் மதிப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டால், எதிர்கால அரசாங்கங்களும் நீதித்துறை தொடர்பான விடயங்களில் போதுமான திட்டமிடல் இன்றி அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வருவதற்கான ஆபத்தான முன்னுதாரணம் உருவாகும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் பொதுமக்கள் பார்வைக்காகவும் வெளியிடப்பட்டுள்ளது.
