வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட பணமோசடி சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய 62 வயதுடைய பெண்ணை கைது செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தவறான காணொளிகளை பெற்றுக்கொண்ட பின்னர், அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் தகவலின்படி, சம்பவம் தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட நபர், தனது தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்ற அச்சத்தில், சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு இலட்சம் ரூபாவை செலுத்தியதாக தெரியவந்துள்ளது. பின்னர் அவர் கணினி குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்
