ஈரானைச் சுற்றியுள்ள மோதலால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், குறைந்தபட்சம் மேலும் ஆறு மாதங்கள் தொடரும் என நோர்வே எரிசக்தி நிறுவனம் எக்வினோர் தெரிவித்துள்ளது.

நோர்வே ஒளிபரப்பு நிறுவனம் NRK-க்கு அளித்த பேட்டியில், எக்வினோர் நிறுவனத்தின் தலைவர், தற்போது உடனடியாக அமைதி நிலவினாலும் கூட, சந்தை வழமையான நிலைக்குத் திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறினார்.
இந்த மோதலின் தாக்கத்தால் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதால், நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர இலாபம் 18 சதவீதம் அதிகரித்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
மேலும், வளைகுடாப் பகுதியில் பல கப்பல்கள் இன்னும் முடக்கப்பட்டுள்ளதோடு, சில கப்பல்கள் உலகின் பல பகுதிகளில் சிதறிக் காணப்படுவதால், சப்ளைச் சங்கிலியை வழமையான நிலைக்குக் கொண்டுவர நேரம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மோதல் யாருக்கும் நன்மை அளிக்காததால், நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
