
Vijay மற்றும் Sangeetha Sornalingam ஆகியோரின் விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது காணொளி வழியாகவோ முன்னிலையாகாத காரணத்தால் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
விஜய் மற்றும் சங்கீதா கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், திருமண உறவை சட்டபூர்வமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சங்கீதா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கடந்த மாதங்களாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
