
நடப்பு Indian Premier League தொடரில் Rajasthan Royals அணியின் இளம் வீரர் Vaibhav Suryavanshi தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Punjab Kings அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சூர்யவன்ஷி பல சாதனைகளை படைத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, Prabhsimran Singh மற்றும் Marcus Stoinis ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 222 ஓட்டங்களை பெற்றது.
இலக்கைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சூர்யவன்ஷி 16 பந்துகளில் 43 ஓட்டங்கள் அடித்து அதிரடி தொடக்கத்தை வழங்கினார். தொடர்ந்து Yashasvi Jaiswal (51) மற்றும் Kusal Perera (52) ஆகியோரின் அரைசதங்களால் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியது.
சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த 167 பந்துகளில் 400 ஓட்டங்களை எட்டிய வீரராக புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் Abhishek Sharma (195 பந்துகள்) மற்றும் Andre Russell (188 பந்துகள்) ஆகியோரின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
மேலும், 230க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் 400 ஓட்டங்களை கடந்த முதல் வீரராகவும் இவர் திகழ்கிறார். நடப்பு தொடரில் 400 ஓட்டங்களுடன் அதிக ஓட்டங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ‘ஆரஞ்சு தொப்பி’யையும் கைப்பற்றியுள்ளார்.
இதுவரை 27 இன்னிங்ஸ்களில் 99 சிக்சர்கள் அடித்துள்ள சூர்யவன்ஷி, இந்த தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக உள்ளார். Chris Gayle 2012ஆம் ஆண்டு படைத்த ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் சாதனையை முறியடிக்க இன்னும் 22 சிக்சர்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
இன்னும் லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், சூர்யவன்ஷி தனது தற்போதைய ஆட்ட வேகத்தைத் தொடர்ந்தால், பல வருடங்களாக நிலைத்திருந்த சாதனைகள் இந்த சீசனிலேயே முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
