இன்றைய தங்க விலை: 24 கரட் பவுண் ரூ.376,000 ஆக நீடிப்பு

22 கரட் பவுண் ரூ.346,000 – விலையில் மாற்றமில்லை

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (20) தங்க விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை.

நேற்று முன்தினம் (18) பதிவான விலையே இன்றும் தொடர்கிறது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,250 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள், சந்தை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து விலைகளை உறுதிப்படுத்திக் கொண்டு கொள்வனவு செய்வது சிறந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top