
ஜூலை 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அரசியலமைப்புப் பேரவை அறிவிப்பு
தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் தற்போது நிலவும் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உறுப்பினர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அரசியலமைப்புப் பேரவை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கான பரிசீலனைக்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பங்கள் இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் “Recommendation for Appointment as a Member of the National Police Commission” என்ற விரைவு இணைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஜூலை 31ஆம் திகதிக்குள் பதிவுத் தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புப் பேரவை குறிப்பிட்டுள்ளது.
மேலும், பதிவுத் தபால் உறையின் மேல் இடது மூலையிலும் அல்லது மின்னஞ்சலின் தலைப்பிலும் “Recommendation for Appointment as a Member of the National Police Commission” என்று குறிப்பிடுவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
