இன்றைய தினம் (01) எரிபொருள் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான எதிர்கால தீர்மானம் அடுத்த நாட்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 21 ஆம் திகதி எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருந்தன. அப்போது பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டன.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ரூ.81 அதிகரித்து ரூ.398 ஆகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ரூ.90 உயர்ந்து ரூ.455 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், ஒட்டோ டீசல் ரூ.79 உயர்ந்து ரூ.382 ஆகவும், சுப்பர் டீசல் ரூ.90 உயர்ந்து ரூ.443 ஆகவும் விலை உயர்ந்தது. மண்ணெண்ணெய் ஒரு லீற்றருக்கு ரூ.60 அதிகரித்து ரூ.255 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
