ஆசியாவின் முன்னணி வீரர்களை வீழ்த்தி தங்கம் வென்ற இலங்கை வீரர்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க 88.55 மீற்றர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று (28) பிற்பகல் 4.45 மணியளவில் நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய ருமேஷ் தரங்க, ஆசியாவின் முன்னணி வீரர்களுடன் கடும் போட்டியிட்டு தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தினார்.

அவரது 88.55 மீற்றர் எறிதல் முதலிடத்தை உறுதி செய்த நிலையில், 85.72 மீற்றர் தூரம் எறிந்த இந்தியாவின் யஷ்வீர் சிங் இரண்டாவது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு தங்கப் பதக்கத்தைச் சேர்த்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top