
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81ஆவது அமர்வுக்கு இடையே, இணையக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கையெழுத்திட்டுள்ளார்.
பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பது முக்கிய பங்களிப்பாக அமையும் என எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தியாவுக்கும் வளைகுடா ஒத்துழைப்பு சபைக்கும் (GCC) இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையும் அவர் வரவேற்றுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், புதிய தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் GCC நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
