கோதுமை மாவின் விலை உயர்வு: சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளை 5 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அதிகரிக்கப்பட்ட புதிய விலைகள் இன்று (21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top