கண்டி–யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பயங்கர விபத்து

கண்டி–யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் அக்குறணை 7ஆம் மைல் கல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top