
போகுந்தர – கரதியான குப்பை மேட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை விமானப்படையின் பெல் 412 வானூர்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ வேகமாக பரவாமல் தடுக்கும் நோக்கில், மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்களத்திற்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
