
ஜோர்தானில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர் வானூர்திகளை இலக்காகக் கொண்டு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், ஜோர்தான் நாட்டை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஈரானிய ஏவுகணைகளை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துவிட்டதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையை சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
