
ஜோர்தானில் அமைந்துள்ள பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளத்தை குறிவைத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தாக்குதலின் தன்மை, ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பாக ஜோர்தான் மற்றும் ஈரான் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், பிராந்திய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக சர்வதேச தரப்பினரும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
