
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்ட சமீபத்திய வருடாந்திர தரவரிசைப் புதுப்பிப்பில், ஆண்களுக்கான T20 தரவரிசையில் இந்திய அணி தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதேவேளை, இலங்கை அணி ஒரு இடம் பின்னடைந்து 9ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
இந்திய அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. இங்கிலாந்து 262 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா 258 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இலங்கை அணி முன்பு 8ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 6 புள்ளிகளை இழந்து 9ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனால் பங்களாதேஷ் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தான் 10ஆவது இடத்தில் தொடர்கிறது.
பெண்களுக்கான T20 தரவரிசையில் அவுஸ்திரேலியா 287 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இலங்கை பெண்கள் அணி 7ஆவது இடத்தை நிலைநிறுத்தியுள்ளது.
