
உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் இன்று (29) மேலும் உயர்வைப் பதிவுசெய்துள்ளன.
சர்வதேச சந்தைத் தரவுகளின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 69.86 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 72.31 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேநேரம், இயற்கை எரிவாயுவின் விலையும் அதிகரித்துள்ளதுடன், அதன் விலை 3.309 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
உலக சந்தையில் தொடரும் இந்த விலை உயர்வு, எரிபொருள் இறக்குமதி செலவுகள், போக்குவரத்து கட்டணங்கள், தொழில்துறை உற்பத்திச் செலவுகள் மற்றும் மின்சார உற்பத்திச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
