
நுவரெலியா பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில், முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சிக்கியுள்ளனர். அவர்களில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் கடுமையாக காயமடைந்து உடனடியாக வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியை இயக்கியது மூத்த மகளாகும். அவரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
