இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கறுவாப்பட்டை 5,000 ரூபாய் முதல் 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுவாப்பட்டைக்கான அதிகரித்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கேள்வி, அதேபோல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
சந்தை நிலவரம் மற்றும் ஏற்றுமதி தேவையின் அடிப்படையில் கறுவாப்பட்டை விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் கறுவா அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
