அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெறும் பயனாளர்களை இலக்காகக் கொண்டு தொலைபேசி ஊடாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில், அடையாளம் தெரியாத நபர்கள் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் பயனாளர்களைத் தொடர்புகொண்டு, தாங்கள் அஸ்வெசும சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் எனப் போலியாக அறிமுகப்படுத்தி, தனிப்பட்ட தகவல்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோசடி நடவடிக்கைகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சபை வலியுறுத்தியுள்ளது.
எனவே, இவ்வாறான போலி தொலைபேசி அழைப்புகள் அல்லது மோசடி முயற்சிகள் தொடர்பில் பாதிக்கப்படுவோர் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், தனிப்பட்ட அல்லது வங்கி தொடர்பான தகவல்களை தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
