
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளை 5 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அதிகரிக்கப்பட்ட புதிய விலைகள் இன்று (21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
