
அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருந்த பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை, தற்போது சுமார் 92 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் விலையும் ஒரு பீப்பாய்க்கு 85 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் தற்காலிகமாகக் குறைந்துள்ளதன் பின்னணியில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த அச்சம் தணிந்ததே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
