
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்வை பதிவு செய்து வருகின்றன.
சமீபத்திய சந்தை நிலவரத்தின்படி, Brent ரக மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 86.91 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 80.48 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் தொடரும் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
