இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (24) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது, 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள “இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு (SLEIS 2026)” தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், நாட்டின் எதிர்கால பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்த உச்சிமாநாடு முக்கிய பங்காற்றும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர, பிரதி உப தலைவர் வினோத் ஹைட்ராமணி, செயலாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷிரான் பெர்னாண்டோ, பிரதி செயலாளர் நாயகமும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான அலிகி பெரேரா மற்றும் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவின் பிரதம பொருளாதார நிபுணர் அனகி ரொட்ரிகோ-வீரசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
