
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தேயிலை பறித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த பெண்ணை பாம்பு கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த ஏனைய தொழிலாளர்கள் உடனடியாக அவரை நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
