
நிலவும் பலத்த மழை காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை வெளியேறும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மழையால் வாகனங்களின் இயக்கம் மந்தமடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று காலை பெய்த கனமழையால் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பல பிரதான வீதிகளிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பணிக்குச் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
