
சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் போர்ப் பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,358.2 அமெரிக்க டொலராகவும், வெள்ளியின் விலை 71.07 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்க விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், தற்போதைய சர்வதேச உயர்வு காரணமாக இலங்கையிலும் தங்க விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலரின் வலுவூட்டல், உலக பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அரசியல், பாதுகாப்பு பதற்றங்கள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன. மேலும், உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை அதிகம் தேர்வு செய்வதும் விலை உயர்வுக்கு கூடுதல் காரணமாக அமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
