
சர்வதேச சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வை பதிவு செய்துள்ளன.
சந்தைத் தகவல்களின்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,323 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 70.51 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, உலகளாவிய முதலீட்டு சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச சந்தை விலை உயர்வின் தாக்கத்தால், இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் விலை மாற்றம் ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
