
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலைமைகள் உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் அறிவிப்பின்படி, குறித்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கற்பிட்டியிலிருந்து பொத்துவில் வரையான பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான வானிலை அறிவிப்புகளை கவனமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
